25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல்,நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்   வீ.ப.ஜெயசீலன், I.A.S. அவர்கள் தொடங்கி வைத்தார்..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல்,நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன், I.A.S. அவர்கள் தொடங்கி வைத்தார்..

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ராஜீக்கள் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S.., அவர்கள் (04.02.2025) தொடங்கி வைத்தார்.

பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரை வழங்குதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். குழந்தைகளாக இருக்கும் போது குடும்பம் மற்றும் சமூகத்தின் பார்வை வேறாக இருக்கும். ஆனால், 18 வயது முடிவடைந்த பின் சட்டத்தின் பார்வையிலும், சமூகத்தின் பார்வையிலும் ஒரு பொறுப்பு மிக்கவர்களாகிறீர்கள் கல்லூரி பருவம்.18 வயதிற்கு பிறகு கிடைக்கும் உரிமையோடு, அதனையொட்டி பொறுப்புகளும், கடமைகளும் நம்மிடம் வந்து சேரும்.  நீங்கள் சமுதாயத்தில் ஒரு பொறுப்புள்ள குடிமகன்.இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் முகநூல், இணையதளங்களில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றி நாம் தெரிந்து கொள்வதை விட அதிகமாக நமது நேரத்தை வீணடிக்கின்றோம்.

 மிகப்பெரிய சட்டத்திற்கு எதிரான தவறை செய்துவிட்டால் கூட உங்களுக்கான தண்டனைகளோ அல்லது உங்களுக்கான சீர்திருத்த முறைகளோ முற்றிலும் வேறுபட்டது.  ஒரு 18 வயது அடைந்தவுடன் உங்களுக்கான உரிமைகள் வந்து விடுகிறது என்பதை விட மிக முக்கியமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது உங்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைக்கு அறிவியல் மனப்பாங்கு என்பது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. நாம் அறிவியலை படித்து அறிவியல் தகவலை பெற்று ஒரு அறிவியல் நிபுணராகவோ அல்லது படித்த படிப்பாளியாகவோ இருப்பது வேறு, அறிவியல் மனப்பாங்கோடு இருப்பது என்பது வேறு. இரண்டிற்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது.எனவே யார் எதை சொன்னாலும் அது நமக்கு பொருத்தமானதாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இதனை திருவள்ளுவர்

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு என்ற  திருக்குறளில் குறிப்பிடுகிறார்.

 இன்றைக்கு உங்களுக்கு இருக்கக்கூடிய அல்லது சில ஆண்டுகளில் நீங்கள் எதிர்கொள்ள இருக்கக்கூடிய வாழ்வியல் சிக்கல்கள் குறித்து உங்களுக்கு மிகத் தெளிவான அறிவியல் பூர்வமான, சட்ட அடிப்படையிலான தரவுகள் அடிப்படையிலான நியாயமான வழிகாட்டுதல் முறையை வழங்குவதற்கான நிகழ்ச்சி தான் இந்த நிகழ்ச்சி.இப்போது எடுக்கக்கூடிய  முடிவுகள் தான் அடுத்து வரக்கூடிய 50 ஆண்டுகளுக்கு உங்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கக்கூடியதாக இருக்கும். அதனால், அந்த முடிவை அறிவின் துணையோடு அறிவியல் மனப்பாங்கோடு எடுக்க வேண்டும்.

 உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறீர்கள். இந்த காலகட்டத்தில் உங்களுடைய கல்லூரியில் நீங்கள் பாடத்தை கற்றுக் கொள்வது ஒரு 20 விழுக்காடு தான். மீதமான வாழ்க்கைக்கு தேவையான 80 சதவீதம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடத்திலும் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.

ஒரு சக தோழி இடத்தில் சக நண்பர்களிடத்தில் எப்படி பழகுவது , கனிவாக இருப்பது என்றும் எந்தெந்த இடங்களில் கோபம் கொள்ள வேண்டுமோ அங்கு கோபம் கொள்ள வேண்டும். கனிவாக இருக்கக்கூடிய அதே நேரத்தில் எங்கெல்லாம் No அல்லது வேண்டாம் என்று சொல்லக்கூடிய சூழ்நிலை வருகின்றதோ அதை தைரியமாக எதிர்கொள்ள கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.நீங்கள் அனைவரும் எல்லாவற்றிலும் கவனத்தோடு இருக்க வேண்டும் ஒவ்வொரு தவறுகளில் இருந்தும் அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டும். தவறை தைரியமாக ஒத்துக் கொண்டு அதிலிருந்து மீண்டு வர வேண்டும். நான் தவறு செய்து விட்டேன் என்பது ஒத்துக் கொள்வதற்கு மிகப்பெரிய தைரியமும், அறிவும் வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்கான வாய்ப்புகள் இன்று உலகில் அதிகமாக கிடைக்கிறது. உங்களுடைய கல்வி வாய்ப்புகளாக இருக்கட்டும், வேலை வாய்ப்புகளாக இருக்கட்டும் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. அவற்றையெல்லாம் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களுக்கென்று அதிகமான சட்ட வாய்ப்புகள் இருக்கிறது.எனவே நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் ஒரு தெளிவான திட்டமிடுதலும், தெளிவான பார்வையும், தெளிவான லட்சியமும் இருந்தால் தொடர்ச்சியான முயற்சிகள் மூலமாக நீங்கள் ஒரு இலக்கை அடைய முடியும். நீங்கள் ஏதாவது ஒன்றை முயற்சி செய்து கொண்டு பாதியில் விட்டு விடாமல் தொடர்ச்சியாக செய்து கொண்டிருந்தால் வெற்றி பெற முடியும்.

இதைவிட முக்கியமானது நீங்கள் இந்த கல்லூரி காலகட்டத்தில் கற்று கொள்வதற்கும், பெற்றுக் கொள்வதற்கும் அன்றாடம் நிறைய இருக்கிறது. இந்த சமூக ஊடகங்கள், வலைதளங்களில் உள்ள கருத்துக்களில் நன்மைகளும், தீமைகளும் இருக்கின்றன. அன்னப்பறவை என்பது பாலில் இருந்து நீரை மட்டும் தனியாக பிரித்து தனக்கு தேவையான பாலை மட்டும் எடுத்துக் கொள்கிறதோ அதுபோல அப்படி உங்களுக்கு தேவையான நன்மைகளும் தீமைகளும் கலந்தே தான் இருக்கிறது அதில் நன்மைகளை மட்டும் எடுத்துக்கொண்டு நன்கு பெற்று கொள்ளுங்கள் ஒரு வேலை உங்கள் பாதையில் தீமைகள் வந்தால் அதை அறிவின் துணையோடு எதிர் கொண்டு மிக பக்குவமாக அதிலிருந்து நன்மைகளை மட்டும் பெற்று மாணவ செல்வங்களாக நீங்கள் உருவாக வேண்டும்.

இந்த வாழ்க்கை நிறைய வாய்ப்புகளை தந்திருக்கிறது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு நீங்கள் உயர்வதற்கும், உங்கள் பெற்றோர்கள், உங்கள் குடும்பத்தினரை உயர்த்துவதற்கும், சமூகத்துக்கு பயனுள்ள மனிதர்களாக வாழ்வதற்கும், எதிர்கால தலைமுறைகளுக்கு வழிகாட்டக் கூடிய அளவிற்கு நீங்கள் அறிவையும், ஆற்றலையும், அன்புகளையும், அனுபவங்களையும் பெற்றுக் கொள்வதற்கு இந்த கல்லூரி காலகட்டத்தில் இணையதளம், அலைபேசியினை முறையாக பயன்படுத்திக் கொள்ளக்கூடிய அளவிற்கு விழிப்புணர்வு பெற்றுக்கொண்டு வெற்றி பெறுவதற்கு தான் இந்த நிகழ்ச்சி என மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S. அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, கல்லூரி முதல்வர், கல்லூரி மாணவிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News